Ingredients (0)
No ingredients were extracted.
Method
- 1
மசாலா விழுது அரைக்க மிக்ஸியில் சின்ன வெங்காயம், ஊறவைத்த கசகசா, முந்திரி, சோம்பு மற்றும் தேங்காய், பட்டை, மிளகு, ஏலக்காய், கிராம்பு சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைத்து பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய் மற்றும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாவித்ரி, அன்னாசிப்பூ, கல்பாசி, பிரியாணி இலை சேர்த்து கலந்து விடவும்.
- 3
எண்ணெய் சிறிது சூடான பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- 4
பின்பு இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
அடுத்ததாக உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 6
அரைத்த மசாலா விழுது சேர்த்து கலந்து விட்டு மசாலா தண்ணீர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
- 7
பிறகு புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். பின்பு உப்பு சேர்த்து கலந்து விடவும். 8. குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
- 8
அட்டகாசமான பரோட்டா சால்னா தயார்.
Nutrition
estimatedNot enough ingredient detail to estimate nutrition for this recipe.